மதுரையில் இருந்து ஆக்சிஜனை நிரப்ப விமானம் மூலம் ஜார்க்கண்ட் சென்ற டேங்கர் லாரிகள்

ஆக்சிஜன் காலியான 34 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 டேங்கர் லாரிகள் ஆக்சிஜனை நிரப்புவதற்காக ராஞ்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

அவனியாபுரம்:

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிக உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்ய மத்திய- மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தமிழகத்திலும் மத்திய- மாநில மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்தும் ரெயில் மற்றும் விமானங்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகின்றது.

அதன்படி கடந்த சில வாரங்களாக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில இருந்து ஆக்சிஜன் நிரப்பிய டேங்கர் லாரிகள் விமானம் மூலம் தமிழகம் கொண்டு வரப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் ஆக்சிஜன் காலியான 34 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 டேங்கர் லாரிகள் ஆக்சிஜனை நிரப்புவதற்காக ராஞ்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன்படி மதுரை விமான நிலையத்தில் இருந்து விமானப்படை விமானம் மூலம் ராஞ்சிக்கு நேற்று இரவு புறப்பட்டு சென்றது.

இதுவரை அந்த மாநிலத்திற்கு ஆக்சிஜன் நிரப்புவதற்காக இங்கிருந்து 9 காலி டேங்கர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மதுரை விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com