‘எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது’ - தவெக குறித்த வீடியோவை பகிர்ந்து மு.க.ஸ்டாலின் பதிவு!

தனியார் ஊடகம் வெளியிட்டுள்ள தவெக ஆட்சி குறித்த வீடியோவை பகிா்ந்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.
‘எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது’ -  தவெக குறித்த வீடியோவை பகிர்ந்து மு.க.ஸ்டாலின் பதிவு!
Published on

இந்தியாவின் பிரபலமான தனியார் பத்திரிக்கை ஊடகம் ஒன்று, தமிழ்நாடு அரசியல், சமூகம் மற்றும் பொருளாதார நிகழ்வுகளைப் பகுப்பாய்வு செய்வதற்காக ‘Focus Tamil Nadu’ என்ற பெயரில் பிரத்யேகமான வீடியோ மற்றும் கட்டுரைத் தொடரை நடத்தி வருகிறது.

இத்தொடரின் ஒருபகுதியாக தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழல், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய், அவர் தொடர்பாக வெளிவரும் போலி செய்திகள், அவரின் அரசியல் நகர்வுகள் தொடர்பாகவும் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அண்மையில் தவெக மற்றும் விஜய் தொடர்பாக இணையங்களில் பரப்பப்பட்ட போலி செய்திகளை ஆராய்ந்து, அதன் உண்மைத்தன்மை தொடர்பாக விளக்கங்கள் அளிக்கும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

“பலரைச் சில காலம் ஏமாற்றலாம்.

சிலரைப் பல காலம் ஏமாற்றலாம்.

ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com