

த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு சென்றார்.
விமான நிலையத்திற்கு கிண்டி ரோட்டில் காரில் சென்று கொண்டிருந்த விஜய் காரை பார்த்து மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு நபர் விமர்சனம் செய்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் விஜய்யை விமர்சித்த நபரை மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றார்.
விமர்சனம் செய்த நபரின் அருகில் சென்ற அந்த பெண் அவரை நோக்கி ‘தேவையில்லாம பேசின... அவ்வளவுதான்’ என கூறினார். இதைக் கேட்ட அந்த நபர் பெண்ணை பார்த்து ஏதோ கையை காட்டியபடி திட்டி விட்டு வேகமாக கடந்து சென்றார். இதை கேட்ட பெண் மீண்டும் கோபத்தில் கொந்தளித்து மீண்டும் அவரை விரட்டி சென்று ‘ஏண்டா டேய்... ’ என திட்டியபடி விரட்டினார்.
இதைக்கேட்ட அந்த நபர் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் அந்த இடத்தை கடந்து சென்றார். நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தால் கிண்டி ரோட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.