தேர்தல் பரப்புரை அனுமதிக்கும், தமிழக அரசுக்கும் என்ன சம்மந்தம்..!- மா.சுப்பிரமணியன்

முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்து வருகிறது.
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும், தமிழக அரசுக்கும் என்ன சம்மந்தம்..!- மா.சுப்பிரமணியன்
Published on

தேர்தல் பிரச்சாரத்திற்கும், தமிழக அரசுக்கும் என்ன சம்மந்தம் என்று, தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் பின்னணியில் திமுக இருப்பதாக விஜய் கூறிய நிலையில் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி பெறுவது எப்படி என்பதை விஜய் தெரிந்து கொள்ள வேண்டும்.

அனுமதி கோரி தேர்தல் ஆணையத்திற்கோ, காவல்துறைக்கோ கடிதம் அளிக்க வேண்டாம். 48 மணி நேரத்திற்கு முன்னர் இணைய வழியாக விண்ணப்பித்தால் போதுமானது.

முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்து வருகிறது.

தேர்தல் பரப்புரை அனுமதிக்கும், தமிழக அரசிற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது?

எங்கு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்பதையும் தேர்தல் ஆணையேமே தீர்மானிக்கிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com