

தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்த நிலையில், இன்று முதலமைச்சர் விஜய் முன்னிலையில் வன்னியரசுக்கு ஆளுநர் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக, திருமாவளவனின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுக எம்பி ஆ.ராசா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ஆ.ராசா தனது எக்ஸ் தள பக்கத்தில் விசிக-வை விமர்சிக்கும் வகையில் மீண்டும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர்,"
என் வீட்டுத் தோட்டத்துத்
தென்னை
கூனி வளைந்து
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்
அதற்குப் பெயர்
”முடத்தெங்கு”!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?
வாழ்க தமிழ்!" என்றார்.