த.வெ.க.வில் இணைகிறேனா?- விஜயபாஸ்கர்

2001-லிருந்து பொது வாழ்வில் பயணித்துள்ளேன், கொரோனா காலத்திலும் என் உயிரை துச்சமென நினைத்து பணியாற்றினேன்.
த.வெ.க.வில் இணைகிறேனா?- விஜயபாஸ்கர்
Published on

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்டதற்கு நாளை தனது நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்றார்.

இதனிடை, புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் சி.விஜயபாஸ்கர் ஆலேசானை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

* விராலிமலை தொகுதி மக்களுக்கு நன்றி உடையவனாக நான் எப்போதும் இருப்பேன்.

* ஆதரவாளர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகளின் கருத்துகளுக்கு செவிமடுத்தேன்.

* 2001-லிருந்து பொது வாழ்வில் பயணித்துள்ளேன், கொரோனா காலத்திலும் என் உயிரை துச்சமென நினைத்து பணியாற்றினேன்.

* தொகுதி மக்களின் நலனே முக்கியம். என் மீது நம்பிக்கை வைத்து மக்கள் என்னை தேர்ந்தெடுத்தார்கள். மக்களின் முடிவே என் முடிவு.

* அதிரடி, பரபரப்பு எதுவும் இல்லை. நான் நிதானமாகவே உள்ளேன்.

* மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன்.

* மக்களிடம் கருத்து கேட்பு நிகழ்வு தொடரும்.

* இளைஞர்கள், பெண்கள் அதிக அளவில் திரண்டு வந்து கருத்துகளை பகிர்ந்து கொண்டனர் என்றார்.

இதனிடையே, தமிழக வெற்றிக்கழகத்தில் இணையப்போவதாக கூறுவது பற்றிய கேள்விக்கு யூகம் என விஜயபாஸ்கர் பதில் அளித்தார். மேலும் நாளை சபாநாயகரை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு நிறைய திருமணங்கள் நாளை இருக்கிறது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com