

சென்னை வந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டின் புதிய அரசு குறித்து பேசிய அவர்,
“ஜனநாயகத்தில், மக்களே தலைவர்கள். தங்களால் யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். இங்கே, திமுகவின் தவறான ஆட்சி மற்றும் மக்கள் விரோத அரசியல் காரணமாக, அவர்கள் தமிழ்நாடு மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளனர்.
தமிழ்நாடு மக்களின் முடிவை நான் வரவேற்கிறேன். தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் விஜயை நான் வரவேற்கிறேன். விஜய், பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடி நாட்டை ஒருங்கிணைந்த முறையில் மேம்படுத்துவதில் உறுதியுடன் இருக்கிறார்.” என தெரிவித்தார்.
தொடர்ந்து நீட் வினாத்தாள் கசிவுத் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,
‘சிபிஐ இந்த விவகாரத்தை விரிவாக விசாரித்து வருகிறது. உண்மைகள் வெளிவரும். தற்போது விசாரணையில் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.