TVK | விஜய் சரியான நேரத்திற்கு வர வேண்டும் - தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தல்

பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 5 இடங்களில் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார்.
TVK | விஜய் சரியான நேரத்திற்கு வர வேண்டும் - தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தல்
Published on

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந்தேதி தொடங்க உள்ளது.

சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் த.வெ.க. தனித்து களம் காணுகிறது.

இந்நிலையில் பெரம்பூர் தொகுதியில் நாளை விஜய் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட எம்.கே.பி. நகரில் விஜய் காலை 11 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 5 இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக விரிவான பயணம் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் இன்றி பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முறையாக தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க. அனுமதி கோரியுள்ளது. போலீஸ் தரப்பிலும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜயின் தேர்தல் பிரசாரம் தொடர்பாக த.வெ.க. மாவட்ட செயலாளருடன் தேர்தல் அதிகாரி, காவல்துறை இணை ஆணையர், துணை ஆணையர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, விஜய் குறிப்பிட்ட நேரத்திற்கு களத்திற்கு வர வேண்டும் என மாவட்ட செயலாளர்களிடம் தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com