

அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், "உண்மையான காங்கிரஸ் கட்சியினர் த.வெ.க-வின் பக்கம்தான் இருக்கிறார்கள்" என்று பேசியிருந்தார்.
ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸிற்குள் உட்கட்சி மோதல்கள் வெடித்துவரும் நிலையில், அவரது இந்தக்கூற்றிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட சென்னை வந்த கார்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
“விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல் தலைவர். அரசியல் முதிர்ச்சி என்றால் என்னவென்று அவருக்குத் தெரியாது. தமிழ்நாடு காங்கிரஸ் வேண்டுமானால் அவருடன் இருக்கலாம். இந்திய தேசிய காங்கிரஸ் அவருடன் இல்லை. இந்திய தேசிய காங்கிரஸ் திமுகவுடன் இருக்கிறது. இந்த கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெறும்” என்று தெரிவித்தார்.