தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை உடைத்த விஜய்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, தி.மு.க. தரப்பிலிருந்து அக்கட்சி குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை உடைத்த விஜய்
Published on

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் கூடிய ஆதரவை அளித்துள்ளது. மதவாத சக்திகளை கூட்டணியில் அனுமதிக்ககூடாது என்ற நிபந்தனையை காங்கிரஸ் விதித்துள்ளது. இதையடுத்தே காங்கிரஸ் தனது ஆதரவை அளித்துள்ளது. த.வெ.க.விற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததன் மூலம் தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக வெளியேறி உள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறிக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டன. எனினும், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, தி.மு.க. தரப்பிலிருந்து அக்கட்சி குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட இதுவும் ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

தற்போதைய இந்த மாற்றத்தினால், 2029 மக்களவைத் தேர்தலுக்கான 'இந்தியா' கூட்டணியின் போக்கிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

பல ஆண்டுகளாக தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வந்தது. தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி பல்வேறு தேர்தல்களில் (உதாரணமாக 2004, 2011, 2021) இணைந்து போட்டியிட்டுள்ளது. இருப்பினும், 2026-ல் 'ஆட்சியில் பங்கு' தொடர்பான இழுபறி மற்றும் அரசியல் சூழல் காரணமாக இந்தக் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com