வெற்றி நிச்சயம்! வெற்றி நிச்சயம்!- பாரதியார் வரிகளை பதிவிட்ட மாணிக்கம் தாகூர்

தலைவர் விஜய்யை காங்கிரஸ் குழு அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றி நிச்சயம்! வெற்றி நிச்சயம்!- பாரதியார் வரிகளை பதிவிட்ட மாணிக்கம் தாகூர்
Published on

தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை அடைய இன்னும் 10 இடங்கள் குறைவாக உள்ளன. இதனால் ஆட்சி அமைக்க காங்கிரஸிடம் ஆதரவு கோரி வருகிறது.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கு விஜய் கடிதம் எழுதியுள்ள நிலையில், கோரிக்கை குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியிடம் தேசியத் தலைமை வழங்கியுள்ளது.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு காங்கிரசின் அரசியல் விவகாரக் குழு கூடுகிறது.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு வழங்கலாமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டெல்லி காங்கிரஸ் தலைமை தவெக-வுக்கு ஆதரவு அளித்த நிலையில் காங்கிரஸ் குழு இன்று தவெக தலைவர் விஜய்யை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பாரதியார் வரிகளை மேற்கோள் காட்டி எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர்,"வெற்றி நிச்சயம்! வெற்றி நிச்சயம்!

தோற்றாலும் தோல்வியில்லை — நம்மிடம்!” பாரதியார்" என குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com