

சட்டசபை கூட்டத்தின் 2-வது நாள் அமர்வு இன்று தொடங்கியது.
சபாநாயகர் தேர்தலில் ஆளும் கட்சியான த.வெ.க. சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற ஜே.சி.டி.பிரபாகர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வானார். சட்டசபை துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார்.
தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அமைச்சர் செங்கோட்டையன் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
இதைத்தொடர்ந்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு எம்எல்ஏக்கள் வாழ்த்துரை தெரிவித்தனர்.
அப்போது விசிக எம்எல்ஏ வன்னி அரசு பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தற்கு பாராட்டு தெரிவித்தார்.
இன்று காலை முதலமைச்சர் விஜய் அறிவித்த 717 மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற அறிவிப்புக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
சட்டசபையில் ஒலிக்கும் விசிகவின் குரல் தமிழ்நாட்டு சிறுபான்மை மக்களின் குரல்.
மத்திய பாஜக அரசுக்கு எதிரான அரசியலை அவைத்தலைவர் முன்னெடுக்க வேண்டும்.
சிறுபான்மை மக்களின் குரல் வலிமை பெற வேண்டும் என அம்பேத்கார் கூறினார். எதிர்க்கட்சிகளின் குரல் வலிமை பெற வேண்டும்.
ஆளுங்கட்சியின் குரலை விட எதிர்க்கட்சிகளின் குரல் சட்டசபையில் வலிமை பெற வேண்டும் என்று கூறினார்.