

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? என்பது குறித்து மதிமுக தலைவர் வைகோ விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
கூட்டணி பேச்சுவார்த்தையில் என்னைச் சந்திக்க ஸ்டாலின் மறுத்துவிட்டார்.
நேரம் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என ஸ்டாலின் கூறினார்.
பாஜகவை எதிர்க்க தான் திமுகவை ஆதரித்தோம். ஆனால் ஈபிஎஸ்ஸை முதல்வராக்க திமுக முயற்சி செய்தது.
ஐயூஎம்எல், விசிக ஆதரவு கொடுத்து அமைச்சர்கள் ஆனார்கள். நாங்கள் தவெகவுக்கு ஆதரவு தரவில்லை. ஆனால் ஏன் எங்களை கேவலமாக பேசுனீர்கள்? நாங்கள் என்ன செய்தோம்?
இரு நாட்களுக்கு முன் நடந்த திருமணத்தில் ஸ்டாலினைச் சந்தித்தேன். என் அருகே சோபாவில் இடம் இருந்தும் அமராமல் இருந்தார்.
ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அவர் சீமானிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அதன்பிறகு அவர் என் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை என ஆதங்கப்பட்டார்.
முன்னதாக, வைகோ தலைமையில் நடந்த ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டத்தை சீர்காழி எம்.எல்.ஏ. புறக்கணித்தார். இன்று நடைபெறும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுக்குழுவில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.