எங்களை காங்கிரசுடன் ஒப்பிடுவதா? - வைகோ ஆவேசம்

மேகதாது விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
எங்களை காங்கிரசுடன் ஒப்பிடுவதா? - வைகோ ஆவேசம்
Published on

சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* சட்டமன்ற தேர்தலில் உயிரைக்கொடுத்து பிரசாரம் செய்தேன்.

* ஒரு தொகுதியில் நாங்கள் விரும்பும் சின்னத்தில் போட்டியிட விரும்பினோம். அதிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூறினர்.

* மேகதாது விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.

* திமுக ஆதரவோடு வெற்றி பெற்ற காங்கிரஸ் நன்றி கூட சொல்லாமல் சென்று தவெக தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றன. காங்கிரசுடன் எங்களை ஒப்பிடாதீர்கள்.

* திமுக தலைமையிலான கூட்டணிக்கு 34 தொகுதிகளில் ஆதரவாக நான் பிரசாரம் செய்த நிலையில் 24 தொகுதியில் வெற்றி பெற்றது.

* மற்ற கட்சிகளுக்கு அதிக இடங்கள் கொடுக்கப்பட்டது. எங்களுக்கு 4 இடங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது.

* திமுக கூட்டணியில் குறைந்த தொகுதிகள் கொடுத்தது மதிமுக தொண்டர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

* தொண்டர்கள் மனதில் உள்ள வருத்தம், நிர்வாகிகள் என்ன நினைக்கின்றனர் என பொதுக்குழுவில் கருத்து பரிமாறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com