அ.தி.மு.க.வில் இருந்து விலகிய வைகை செல்வன் த.வெ.க.வில் இணைகிறார்

அ.தி.மு.க.வில் நீண்ட காலம் பணியாற்றி இருந்த வைகை செல்வன் இலக்கிய ஆர்வம் கொண்டவர் ஆவார். பல்வேறு புத்தகங்களையும் அவர் எழுதி இருக்கிறார்.
வைகை செல்வன்
Published on

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் பல்வேறு கட்சியை சேர்ந்த பலர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், நேற்று அ.தி.மு.க.வில் இருந்து விலகிய வைகை செல்வன் இன்று த.வெ.க.வில் இணைய உள்ளார். வைகை செல்வனின் இந்த முடிவு அதிமுகவிற்கு மேலும் ஒரு பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு

அ.தி.மு.க.வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் நேற்று எடப்பாடி பழனிசாமியை குற்றம்சாட்டி அறிக்கையும் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் வைகை செல்வன் இன்று மாலை த.வெ.க.வில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் விஜய்யை இன்று மாலை நேரில் சந்தித்து வைகை செல்வன் தன்னை த.வெ.க.வில் இணைத்துக் கொள்ள உள்ளார்.

அ.தி.மு.க.வில் நீண்ட காலம் பணியாற்றி இருந்த வைகை செல்வன் இலக்கிய ஆர்வம் கொண்டவர் ஆவார். பல்வேறு புத்தகங்களையும் அவர் எழுதி இருக்கிறார். அ.தி.மு.க. சார்பில் பல்வேறு விவாதங்களிலும் அவர் பங்கேற்று உள்ளார்.

இலக்கியவாதி To த.வெ.க செய்தித் தொடர்பாளர்?

இந்த நிலையில் வைகை செல்வன் த.வெ.க.வில் இணைந்து புதிய அரசியல் பயணத்தை தொடங்க உள்ளார். அந்த கட்சியில் அவருக்கு செய்தி தொடர்பு பிரிவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

மகாபலிபுரத்தில் அண்மையில் நடைபெற்ற த.வெ.க-வின் பிரம்மாண்ட இணைவு விழாவில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன், வளர்மதி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் த.வெ.க-வில் இணைந்தனர். அவர்களைத் தொடர்ந்து வைகை செல்வனும் தற்போது த.வெ.க-விற்கு மாறுவது தமிழக அரசியலில் த.வெ.க-வின் பலத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com