

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அன்றைய நாளில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 4-ம் தேதி எண்ணப்படுகின்றன. வாக்குப்பதிவுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க. சார்பில் மாதவரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் மாதவரம் V மூர்த்தி போட்டியிடுகிறார். இதனால் தனது ஆதரவாளர்களுடன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீடு வீடாகச் சென்று முன்னாள் அமைச்சர் மாதவரம் V மூர்த்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் V மூர்த்தி மாதவரம் தொகுதிக்கு செய்யப்பட உள்ள வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:
1. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிட மாதவரம் பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (IT PARK) அமைத்து தரப்படும்.
2. பெருமளவில் புதிய தொழில் நிறுவனங்களை ஏற்படுத்த ஏதுவாக மாதவரத்தில் உள்ள அரசு நிலங்களைப் பயன்படுத்தி இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.
3. புதிதாக அமைக்க உள்ள மாதவரம் மெட்ரோ நிலையத்திலிருந்து திருவொற்றியூர் பகுதிக்கு மெட்ரோ இணைப்பு பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
4. மாதவரத்தில் தற்போது தனியார் கட்டிடத்தில் இயங்கி வரும் நீதிமன்றத்தை அரசு சொந்தக் கட்டிடத்தில் அமைத்து தரப்படும்.
5. மாதவரம் பகுதியில் பெருமளவில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
அமைத்து தரப்படும்.
6. மாதவரம் தொகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் மாத்தூர் மஞ்சம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனை, சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்.
7. மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் இப்பகுதியைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அவர்களுக்கு பணி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
8. மாதவரம் பகுதியில் உள்ள படித்த பெண்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் அவர்களுக்கு ஒரு அரசு செவிலியர்/ பிசியோதெரபி (Nursing–Physiotherapy) கல்லூரி அமைத்து தரப்படும்.
9. மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட மாதவரம் mufussel ரவுண்டானா முதல் ரெட்ஹில்ஸ் வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருப்பதால் அதை குறைக்கும் வகையில் டோல்கேட் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
10. மாதவரத்தில் வசிக்கும் கிறிஸ்தவ மக்களுக்கு தனியாக ஒரு கல்லறை அமைத்து தரப்படும்.
11. ஆந்திர அரசு செங்குன்றத்தில் நெல் கொள்முதல் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க ஏதுவாக வாகனங்கள் நிறுத்த இடம் அமைத்து தரப்படும்
என தெரிவித்துள்ளார்.