

டெல்லி சென்றுள்ள அண்ணாமலை, பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து, தமிழக பா.ஜ.க. குறித்து கடிதம் அளித்ததாக தகவல் வெளியானது.
தமிழக பா.ஜ.க.வில் நடக்கும் உட்கட்சி விவகாரங்கள், உட்கட்சி மோதலில் ஈடுபடுவது யார், யார்.?, தான் ஒதுக்கப்பட்டதன் பின்னணி,
பா.ஜ.க.வின் தோல்விக்கான காரணங்கள் என பல முக்கிய விஷயங்களை அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை அவரது வீட்டில் அண்ணாமலை இன்று சந்தித்தார். அப்போது, பாஜகவில் இருந்து விலக முடிவெடுத்தது குறித்து அமித்ஷாவிடம் விளக்கம் அளித்தார்.
புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.