எதிர்க்கட்சி தலைவராகும் உதயநிதி?

எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவராகும் உதயநிதி?
Published on

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று தமிழக அரசியலில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. இருப்பினும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்ற அயராத நம்பிக்கையில் இருந்த தி.மு.க. 54 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமைய உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விஜயை எதிர்க்க உதயநிதி சரியான ஆளாக இருப்பார் என தி.மு.க. தலைமை கருதுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இதுதொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com