

தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது.
திமுக சட்டமன்ற குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துணை தலைவராக கே.என்.நேருவும், கொறடாவாக எ.வ.வேலுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.