

சென்னை:
தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
இது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானால் மகிழ்ச்சி அடைவோம் என்று மூத்த அமைச்சர்கள் பலரும் நிகழ்ச்சியில் பேசி வந்தனர். ஆனாலும் அது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வந்த பின்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.