

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக அடைந்த தோல்வி குறித்து கள ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக, மு.க. ஸ்டாலின் தலைமையில் 36 பேர் கொண்ட கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. தொண்டர்களை நேரடியாக சந்தித்து அவர்களது கருத்துக்களையும், பரிந்துரைகளையும் பெற்று கள ஆய்வு அறிக்கையை ஜூன் 5-ந்தேதிக்குள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
இந்த நிலையில், திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் வரும் மே 23-ந்தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி அறித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலை அரங்கத்தில் மே 23-ந்தேதி திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.