Vijay | திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் த.வெ.க. தலைவர் விஜய்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார் விஜய்.
Vijay | திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் த.வெ.க. தலைவர் விஜய்
Published on

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 28) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதற்காக தனி விமானம் மூலம் நள்ளிரவில் மதுரை வந்த விஜய்-க்கு விமான நிலையத்தில் த.வெ.க. தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக திருச்செந்தூர் வந்தடைந்த விஜய் பட்டு வேஷ்டி மற்றும் துண்டு அணிந்தபடி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இவருடன் த.வெ.க. பொதுச் செயலாளர் ஆனந்த் வந்திருந்தார். அதிகாலை என்ற போதிலும், விஜய் வருகையை அறிந்து கோவிலில் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது.

கோவிலுக்குள் வந்த விஜய்-க்கு சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வேல் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com