Vijay | நள்ளிரவில் கூடிய கூட்டம்... மதுரையில் த.வெ.க. தலைவர் விஜய்-க்கு உற்சாக வரவேற்பு

மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக திருச்செந்தூர் செல்லும் விஜய் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
Vijay | நள்ளிரவில் கூடிய கூட்டம்... மதுரையில் த.வெ.க. தலைவர் விஜய்-க்கு உற்சாக வரவேற்பு
Published on

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 28) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

இதற்காக தனி விமானம் மூலம் மதுரை வந்த விஜய்-க்கு வரவேற்பு அளிக்க நள்ளிரவிலும் த.வெ.க. தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் விமான நிலையம் வந்திருந்தனர்.

நள்ளிரவில் மதுரை விமான நிலையம் வந்த விஜயை கண்டதும் ஆர்ப்பரித்த தொண்டர்கள் அவர் மீது மலர் தூவி வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை கண்டதும் வாகனத்தில் ஏறியதும் விஜய் அவர்களை நோக்கி கைகளை அசைத்து வணக்கம் தெரிவித்தார்.

பிறகு கார் மூலம் மதுரை விமான நிலையத்தில் இருந்து விஜய் புறப்பட்டு சென்றார். இன்று காலை விஜய் சாலை மார்க்கமாக திருச்செந்தூர் செல்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com