நிமிடத்திற்கு நிமிடம் ரீல்ஸ் போடும் த.வெ.க. அரசு: பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர தவறியிருப்பது கண்டனம்- டிடிவி தினகரன்

இனி வரும் காலங்களில், இறை நம்பிக்கையுடன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய முன்னேற்பாடுகளை செய்திட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
நிமிடத்திற்கு நிமிடம் ரீல்ஸ் போடும் த.வெ.க. அரசு: பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர தவறியிருப்பது கண்டனம்- டிடிவி தினகரன்
Published on

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகம் நிகழ்வுக்கு முறையான முன்னேற்பாடுகள் செய்யாததன் விளைவாக கடுமையான வெயிலை எதிர்கொள்ள முடியாமல் குழந்தைகள், பெண்கள் உட்பட பக்தர்கள் பலர் மயக்கமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நிமிடத்திற்கும் நிமிடம் ரீல்ஸ் போட்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கு, வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் வைகாசி விசாக நிகழ்வுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்கோவிலில் கூடுவார்கள் என்பது தெரிந்திருந்தும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர தவறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, இனி வரும் காலங்களில், இறை நம்பிக்கையுடன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய முன்னேற்பாடுகளை செய்திட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com