

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்து குளக்கரையில் வீசப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமல்லாமல் சமூகத்தின் அடிப்படை மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கும் அவலநிலையை ஏற்படுத்தியுள்ளன.
எனவே,கொடூரமான முறையில் சிறுமியைக் கொலை செய்த மனிதநேயமற்ற மிருகங்களைக் கைது செய்து அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் தனி கவனம் செலுத்தவேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜயை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.