TN Assembly Election | தேர்தல் அறிக்கை வெளியீடு..! 120 வாக்குறுதிகளை அறிவித்த டி.டி.வி தினகரன்

தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை.
TN Assembly Election | தேர்தல் அறிக்கை வெளியீடு..! 120 வாக்குறுதிகளை அறிவித்த டி.டி.வி தினகரன்
Published on

அதிமுக கூட்டணியில் அமமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார்.

அப்போது, ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் என்பது உள்ளிட்ட 120 வாக்குறுதிகளை வெளியிட்டார்.

அவர் அளித்த வாக்குறுதியில் சிலவற்றில்:-

தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்,

மாதம் ஒருமுறை வீடுகளுக்கு மின் கணக்கீடு, மதுரை, கோவையில் மெட்ரோ ரெயில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

மணல் உள்ளிட்ட கனிமவளக்கொள்ளையில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்தி ஊதியத்தையும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் போல் ஆண்கள் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு சிறிய தொழில்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.2500 ஆக உயர்த்த வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவுர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com