சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா உறுதி: ஒருவர் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 2,312- பேருக்கு கொரோனா தொற்று கடந்த 24 மணி நேரத்தில் 33,058 பேர்களிடம் கொரோனா பரிசோதனை.
கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
Published on

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் மேலும் 2,312- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 13 ஆயிரத்து 121- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 2,682 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொற்று பரவலைக் கண்டறிய இன்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 058- ஆகும். தலைநகர் சென்னையில் 618- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com