GOLD PRICE TODAY: வார தொடக்கத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
GOLD PRICE TODAY: வார தொடக்கத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்
Published on

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கியமானதாக உள்ளது. இதற்கிடையே, சர்வதேச பொருளாதார சூழல், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதன் பின்னர், தங்கம் விலையில் தொடர் மாற்றம் காணப்படுகிறது.

கடந்த மாதம் இறுதியில் தங்கம் விலை சற்று ஏற்றத்தை சந்தித்து வந்த நிலையில், இம்மாதம் 1-ந்தேதி முதல் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 1-ந்தேதி கிராம் ரூ.14 ஆயிரத்து 500-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் எனவும் விற்பனை செய்யப்பட்டது. 3-ந்தேதி வரை விலையில் மாற்றம் ஏதும் காணப்படவில்லை. தொடர்ந்து, 4-ந்தேதி கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.14 ஆயிரத்து 180-க்கும். சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. 5-ந்தேதி தங்கம் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்தது. 6-ந்தேதி தங்கம் கிராமுக்கு ரூ.230 குறைந்து ரூ.14 ஆயிரத்து 200-க்கும், சவரனுக்கு ரூ.1,840 குறைந்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,12,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.14,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

07-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

06-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

05-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,440

04-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,840

03-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

07-06-2026- ஒரு கிராம் ரூ.270

06-06-2026- ஒரு கிராம் ரூ.280

05-06-2026- ஒரு கிராம் ரூ.280

04-06-2026- ஒரு கிராம் ரூ.285

03-06-2026- ஒரு கிராம் ரூ.290

X

Maalai Malar
www.maalaimalar.com