

தங்கம் விலையில் ஏற்றம்-இறக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 4-ந்தேதி விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.180-ம், சவரனுக்கு ரூ.1,440-ம் குறைந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 2 முறை விலை ஏற்றம் கண்டது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 820-க்கும், ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்து 560-க்கும் விற்கப்பட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.230-ம், சவரனுக்கு ரூ.1,840-ம் உயர்ந்தது. பின்னர் மாலை கூடுதலாக கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் அதிகரித்தது. ப்படியாக நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.280-ம், சவரனுக்கு ரூ.2,240-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 100-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,13,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.14,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
06-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800
05-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,560
04-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,000
03-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,000
02-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,000
06-05-2026- ஒரு கிராம் ரூ.275
05-05-2026- ஒரு கிராம் ரூ.265
04-05-2026- ஒரு கிராம் ரூ.270
03-05-2026- ஒரு கிராம் ரூ.270
02-05-2026- ஒரு கிராம் ரூ.270