GOLD PRICE TODAY | மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
GOLD PRICE TODAY | மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
Published on

தங்கம் விலை கடந்த 24-ந்தேதி வரை குறைந்து கொண்டே வந்த நிலையில், 25-ந்தேதி விலை ஏற்றம் கண்டு, 26-ந்தேதி குறைந்தது. அதன் பின்னர் மீண்டும் விலை உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.

நேற்று காலை கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து, பிறகு மாலை கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் உயர்ந்து காணப்பட்டது.

மொத்தமாக நேற்று முன்தினம் விலையுடன் ஒப்பிடுகையில் கிராமுக்கு ரூ.110-ம், சவரனுக்கு ரூ.880-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,09,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,670-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

30-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,160

29-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,280

28-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,280

27-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,440

26-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,800

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

30-03-2026- ஒரு கிராம் ரூ.255

29-03-2026- ஒரு கிராம் ரூ.250

28-03-2026- ஒரு கிராம் ரூ.250

27-03-2026- ஒரு கிராம் ரூ.245

26-03-2026- ஒரு கிராம் ரூ.260

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com