

தங்கத்தின் விலை ஏற்றமும், இறக்கமுகமாக இருந்து வருகிறது. சென்னையில் கடந்த 25-ந்தேதி கிராம் ரூ.14 ஆயிரத்து 780-க்கு விற்றது. அதன்பின் தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக இறங்கியது. நேற்று முன்தினம் கிராம் ரூ.14 ஆயிரத்து 500-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் என உயர்ந்தது. அதன்படி நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 600-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.1,17,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.14,630-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
29-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800
28-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000
27-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,200
26-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,840
25-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,240
29-05-2026- ஒரு கிராம் ரூ.290
28-05-2026- ஒரு கிராம் ரூ.285
27-05-2026- ஒரு கிராம் ரூ.290
26-05-2026- ஒரு கிராம் ரூ.295
25-05-2026- ஒரு கிராம் ரூ.295