

தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடனேயே நீடிக்கிறது. ஓரிரு நாட்கள் விலை ஏறுவதும், பின்னர் சரிவதுமான நிலையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் கடந்த வாரம் முழுவதும் ஏற்ற, இறக்கத்துடன் நீடித்தது. நேற்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை. ஒரு சவரன் ரூ.1,16,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் 2-வது நாளாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,16,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போன்று வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. தொடர்ந்து 5-வது நாளாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
2-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000
1-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000
31-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,040
30-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,040
29-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800
2-06-2026- ஒரு கிராம் ரூ.290
1-06-2026- ஒரு கிராம் ரூ.290
31-05-2026- ஒரு கிராம் ரூ.290
30-05-2026- ஒரு கிராம் ரூ.290
29-05-2026- ஒரு கிராம் ரூ.290