GOLD PRICE TODAY | தங்கம் விலை உயர்வு, வெள்ளி விலை சரிவு - இன்றைய நிலவரம்

தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.13,430-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
GOLD PRICE TODAY | தங்கம் விலை உயர்வு, வெள்ளி விலை சரிவு - இன்றைய நிலவரம்
Published on

தங்கம் விலை கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி வருகிறது. கடந்த 12-ந்தேதிக்கு பிறகு தொடர்ந்து விலை சரிந்து வந்த நிலையில், கடந்த 23, 24-ந்தேதிகளில் ஒரே நாளில் விலை ஏற்றம்-இறக்கத்தை சந்தித்தது.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.350-ம், சவரனுக்கு ரூ.2,800-ம் அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து இருந்தது. பின்னர் மாலையில் கிராமுக்கு ரூ.320-ம், சவரனுக்கு ரூ.2,560-ம் குறைந்தது.

நேற்று முன்தினம் விலையைவிட கிராமுக்கு ரூ.250-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 350-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 23, 24-ந்தேதிகளில் காலையில் விலை குறைந்தும், மாலையில் அதிகரித்தும் இருந்த நிலையில், நேற்று காலையில் உயர்ந்து, மாலையில் குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,07,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.13,430-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை உயர்ந்த நிலையில் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

26-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,800

25-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,800

24-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,000

23-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,720

22-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,960

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

26-03-2026- ஒரு கிராம் ரூ.260

25-03-2026- ஒரு கிராம் ரூ.260

24-03-2026- ஒரு கிராம் ரூ.250

23-03-2026- ஒரு கிராம் ரூ.250

22-03-2026- ஒரு கிராம் ரூ.250

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com