GOLD PRICE TODAY: தங்கம் விலை அதிரடி சரிவு - இன்றைய நிலவரம்

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
Gold
Published on

தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து விலை அதிகரித்து கொண்டே வந்தது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 450-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 600-க்கும் விற்கப்பட்டது.

அதன் பின்னர் மேலும் விலை அதிகரித்து, பின்னர் குறைந்து மார்ச் மாதம் 23-ந்தேதி ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 340-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 720-க்கும் விற்பனை ஆனது.

இதனையடுத்து விலை தொடர்ந்து ஏற்றம் கண்டது. இப்படியாக விலை எகிறி வந்து, இம்மாதத்தின் தொடக்கத்தில் அதாவது 1-ந்தேதி ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

தங்கம் விலை சரிவு

அதனைத்தொடர்ந்து விலை சரிந்து, கடந்த 15-ந்தேதி ஏறுமுகத்துக்கு சென்று மீண்டும் இறங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை சரிந்திருந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 560-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 480-க்கும் விற்கப்பட்ட நிலையில், நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.210-ம், சவரனுக்கு ரூ.1,680-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 350-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சவரனுக்கு ரூ.1,680 சரிவு

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைந்து ரூ.1,05,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 குறைந்து ரூ.13,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.230-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 360-ம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

24-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,800

23-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,480

22-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,800

21-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,800

20-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,800

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

24-06-2026- ஒரு கிராம் ரூ.240

23-06-2026- ஒரு கிராம் ரூ.250

22-06-2026- ஒரு கிராம் ரூ.255

21-06-2026- ஒரு கிராம் ரூ.255

20-06-2026- ஒரு கிராம் ரூ.255

X

Maalai Malar
www.maalaimalar.com