GOLD PRICE TODAY | சற்றே உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

வெள்ளி விலை இன்று குறைந்து உள்ளது.
GOLD PRICE TODAY | சற்றே உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்
Published on

தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும். மறுநாள் இறங்குவதும் என கண்ணாமூச்சி காட்டி வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 870-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 960-க்கும் விற்பனையானது. நேற்று ரூ.120 குறைந்து கிராம் ரூ.14 ஆயிரத்து 750-க்கும், ரூ.960 குறைந்து சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் எவ்வளவு விலை உயர்ந்ததோ, அதே விலை மாற்றம் இன்றி மீண்டும் குறைந்திருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.1,18,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.14,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

20-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000

19-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,960

18-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000

17-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000

16-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

20-05-2026- ஒரு கிராம் ரூ.285

19-05-2026- ஒரு கிராம் ரூ.300

18-05-2026- ஒரு கிராம் ரூ.300

17-05-2026- ஒரு கிராம் ரூ.290

16-05-2026- ஒரு கிராம் ரூ.290

X

Maalai Malar
www.maalaimalar.com