

அட்சய திருதியையொட்டி நேற்று முன்தினம் தமிழகத்தில் நகைக்கடைகளில் தங்கத்தின் விற்பனை அமோகமாக இருந்தது. தொடர்ந்து நேற்றும் நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் தங்கத்தின் விலையும் நேற்று சற்று குறைந்திருந்தது.
சென்னையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,300-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,14,400-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.14,300-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,400-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
20-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,400
19-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,880
18-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,880
17-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,680
16-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,880
20-04-2026- ஒரு கிராம் ரூ.280
19-04-2026- ஒரு கிராம் ரூ.280
18-04-2026- ஒரு கிராம் ரூ.280
17-04-2026- ஒரு கிராம் ரூ.275
16-04-2026- ஒரு கிராம் ரூ.275