GOLD PRICE TODAY | தொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை - நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
 GOLD PRICE TODAY | தொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை - நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்
Published on

தங்கம் விலை கடந்த 12-ந்தேதியில் இருந்து தொடர்ந்து விலை சரிந்து வருவதை பார்க்க முடிகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை குறைந்து காணப்பட்டது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 650-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 200-க்கும், நேற்று கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 570-க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்து 560-க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்துக்கு கீழ் வந்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.550-ம், சவரனுக்கு ரூ.4,400-ம் குறைந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,14,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.14,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:

18-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,560

17-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,200

16-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,680

15-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,080

14-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,080

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:

18-03-2026- ஒரு கிராம் ரூ.275

17-03-2026- ஒரு கிராம் ரூ.280

16-03-2026- ஒரு கிராம் ரூ.276

15-03-2026- ஒரு கிராம் ரூ.280

14-03-2026- ஒரு கிராம் ரூ.280

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com