

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் நீடித்து வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,14,880-க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.14,360-க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,13,680-க்கும், கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,210-க்கு விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.14,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.280-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
17-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,680
16-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,880
15-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560
14-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760
13-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,480
17-04-2026- ஒரு கிராம் ரூ.275
16-04-2026- ஒரு கிராம் ரூ.275
15-04-2026- ஒரு கிராம் ரூ.275
14-04-2026- ஒரு கிராம் ரூ.265
13-04-2026- ஒரு கிராம் ரூ.260