

சென்னையில் கடந்த சில தினங்களாக இறங்குமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம் மீண்டும் ஏற்றம் கண்டது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 70-க்கும், சவரனுக்கு ரூ.1,680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 560-க்கும் விற்பனையானது.
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,12,480-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.14,060-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,12,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.14,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.275-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
16-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,480
15-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,560
14-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,880
13-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,880
12-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,400
16-06-2026- ஒரு கிராம் ரூ.275
15-06-2026- ஒரு கிராம் ரூ.280
14-06-2026- ஒரு கிராம் ரூ.270
13-06-2026- ஒரு கிராம் ரூ.270
12-06-2026- ஒரு கிராம் ரூ.265