இந்தியாவில் வெள்ளி இறக்குமதி சரிவு - தங்கம் இறக்குமதி 34 சதவீதம் உயர்வு

கடந்த 2025 மே மாதத்தில் 566.22 மில்லியன் டாலராக இருந்த வெள்ளியின் இறக்குமதி, இந்த ஆண்டு மே மாதத்தில் வெறும் 75.57 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
Gold
Published on

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மிக அதிகமாக காணப்பட்ட போதிலும், இந்தியாவின் தங்கம் இறக்குமதி கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதத்தில் 34 சதவீதம் உயர்ந்து 3.41 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. மறுபுறம், கடந்த 2025 மே மாதத்தில் 566.22 மில்லியன் டாலராக இருந்த வெள்ளியின் இறக்குமதி, இந்த ஆண்டு மே மாதத்தில் வெறும் 75.57 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இது 86.65 சதவீத வீழ்ச்சியாகும்.

தங்கம் இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக, இந்தியாவின் ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையேயான வித்தியாசம்) 28.21 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி மதிப்பில் தங்கம் மட்டுமே 5 சதவீதத்திற்கும் அதிகமாகப் பங்களிக்கிறது. இந்தியாவிற்கு தங்கம் இறக்குமதி செய்யப்படும் நாடுகளில் சுவிட்சர்லாந்து 40 சதவீதப் பங்களிப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகம் 16 சதவீதத்திற்கும் அதிகமாகவும், தென்னாப்பிரிக்கா சுமார் 10 சதவீதப் பங்களிப்பையும் கொண்டுள்ளன. இருப்பினும், கடந்த மே மாதத்தில் சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 57.73 சதவீதம் குறைந்துள்ளது.

மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com