

கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்த 10, 11-ந்தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,17,680-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,710-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:
16-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,680
15-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,080
14-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,080
13-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
12-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,760
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:
16-03-2026- ஒரு கிராம் ரூ.276
15-03-2026- ஒரு கிராம் ரூ.280
14-03-2026- ஒரு கிராம் ரூ.280
13-03-2026- ஒரு கிராம் ரூ.290
12-03-2026- ஒரு கிராம் ரூ.290