GOLD PRICE TODAY | தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது.
GOLD PRICE TODAY | தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்
Published on

தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 12-ந்தேதி சவரனுக்கும், ரூ.1,840 உயர்ந்திருந்த நிலையில், அதற்கு மறுநாள் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் மீண்டும் விலை அதிகரித்து காணப்பட்டது. அன்றைய நாளில் கிராமுக்கு ரூ.670-ம், சவரனுக்கு ரூ.5,360-ம் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை தொட்டது.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்தது. மேலும் விலை உயருமோ? என நினைத்திருந்த நேரத்தில் நேற்று திடீரென்று விலை குறைந்தது.

அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 50-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 400-க்கும் விற்கப்பட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்திருந்த சூழலில், பிற்பகலில் மேலும் ரூ.185-ம், சவரனுக்கு ரூ.1,480-ம் குறைந்தது.

ஆக மொத்தம் நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.285-ம், சவரனுக்கு ரூ.2,280-ம் சரிந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 765-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,18,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.14,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

15-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,120

14-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400

13-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,000

12-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,640

11-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

15-05-2026- ஒரு கிராம் ரூ.305

14-05-2026- ஒரு கிராம் ரூ.315

13-05-2026- ஒரு கிராம் ரூ.320

12-05-2026- ஒரு கிராம் ரூ.300

11-05-2026- ஒரு கிராம் ரூ.285

X

Maalai Malar
www.maalaimalar.com