GOLD PRICE TODAY: தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்

நேற்று ஒரு சவரன் ரூ.1,10,880-க்கும், ஒரு கிராம் ரூ.13,860-க்கும் விற்பனையானது.
gold bangles
Published on

தங்கம் விலை எந்த அளவுக்கு குறைந்ததோ, அதே அளவுக்கு ஏற்றம் கண்டது.

தங்கம் விலை கடந்த 12-ந்தேதி கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2,400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது.

13-ந்தேதி சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.1,10,880-க்கும், கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.13,860-க்கு விற்பனையானது. நேற்று ஒரு சவரன் ரூ.1,10,880-க்கும், ஒரு கிராம் ரூ.13,860-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை அதிரடி உயர்வு

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 அதிகரித்து ரூ.1,12,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 அதிகரித்து ரூ.14,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை உயர்வு

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

14-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,880

13-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,880

12-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,400

11-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,000

10-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,400

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

14-06-2026- ஒரு கிராம் ரூ.270

13-06-2026- ஒரு கிராம் ரூ.270

12-06-2026- ஒரு கிராம் ரூ.265

11-06-2026- ஒரு கிராம் ரூ.260

10-06-2026- ஒரு கிராம் ரூ.260

X

Maalai Malar
www.maalaimalar.com