GOLD PRICE TODAY | தொடர்ந்து விலை உயர்ந்து வரும் தங்கம் - இன்றைய நிலவரம்

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
GOLD PRICE TODAY | தொடர்ந்து விலை உயர்ந்து வரும் தங்கம் - இன்றைய நிலவரம்
Published on

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இந்த 9 சதவீத வரி உயர்வு நேற்று முதலே அமலுக்கு வந்து விட்ட காரணத்தினால், தங்கம், வெள்ளி மீதான விலையிலும் நேற்றே தாக்கம் எதிரொலித்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 330-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 640-க்கும் விற்பனையானது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்தது. கிராமுக்கு ரூ.1,070 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 400-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,20,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.15,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை 2 நாட்களில் ரூ.5,760 விலை உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.315-க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

12-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,000

12-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,640

11-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800

10-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,200

09-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,200

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

13-05-2026- ஒரு கிராம் ரூ.320

12-05-2026- ஒரு கிராம் ரூ.300

11-05-2026- ஒரு கிராம் ரூ.285

10-05-2026- ஒரு கிராம் ரூ.280

09-05-2026- ஒரு கிராம் ரூ.280

X

Maalai Malar
www.maalaimalar.com