GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்
Published on

தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. கடந்த 10-ந்தேதி கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் குறைந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் மேலும் கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2,400-ம் சரிந்திருந்தது. இதனைத் தொடர்ந்து மேலும் குறையுமா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தங்கம் விலை நேற்று அப்படி இல்லை என முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

அதன்படி, நேற்று முன்தினம் எந்த அளவுக்கு குறைந்ததோ, அதே அளவுக்கு ஏற்றம் கண்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் தங்கம் விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2,400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலை உயர்வு

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.1,10,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.13,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

12-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,400

11-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,000

10-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,400

09-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

08-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,560

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

12-06-2026- ஒரு கிராம் ரூ.265

11-06-2026- ஒரு கிராம் ரூ.260

10-06-2026- ஒரு கிராம் ரூ.260

09-06-2026- ஒரு கிராம் ரூ.270

08-06-2026- ஒரு கிராம் ரூ.270

X

Maalai Malar
www.maalaimalar.com