

தங்கம் விலை இம்மாதம் தொடக்கத்தில் இருந்து சரிந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. கடந்த 6-ந்தேதி கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் குறைந்தது.
அதனைத் தொடர்ந்தும் விலை இறங்குமுகத்திலேயே இருந்தது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் அதிரடியாக குறைந்து காணப்பட்டது. அதன்படி, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 800-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயி ரத்து 400-க்கும் விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரப்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2.400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற் பனை செய்யப்பட்டது. கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரையில், தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,000-ம், சவரனுக்கு ரூ.8 ஆயிரமும் குறைந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்து ரூ.1,10,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 அதிகரித்து ரூ.13,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை 2 நாட்களாக உயராமல் இருந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
11-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,000
10-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,400
09-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600
08-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,560
07-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600
11-06-2026- ஒரு கிராம் ரூ.260
10-06-2026- ஒரு கிராம் ரூ.260
09-06-2026- ஒரு கிராம் ரூ.270
08-06-2026- ஒரு கிராம் ரூ.270
07-06-2026- ஒரு கிராம் ரூ.270
06-06-2026- ஒரு கிராம் ரூ.280