GOLD PRICE TODAY | சற்றே குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
GOLD PRICE TODAY | சற்றே குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்
Published on

தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. அதன்படி, கடந்த 5-ந்தேதியில் இருந்து ஒருநாள் விலை ஏறுவதும், மறுநாள் விலை குறைவதுமாக இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் விலை குறைந்திருந்த நிலையில், நேற்று அதிகரித்து காணப்பட்டது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்துக்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி. கிராமுக்கு ரூ.125-ம், சவரனுக்கு ரூ.1,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 125-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.1,12,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.14,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

10-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,000

09-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,000

08-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

07-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,880

06-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,920

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

10-04-2026- ஒரு கிராம் ரூ.265

09-04-2026- ஒரு கிராம் ரூ.260

08-04-2026- ஒரு கிராம் ரூ.265

07-04-2026- ஒரு கிராம் ரூ.255

06-04-2026- ஒரு கிராம் ரூ.260

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com