GOLD PRICE TODAY | மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
GOLD PRICE TODAY | மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
Published on

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வரும் சூழலில், அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியானதும், நேற்று முன்தினம் விலை எகிறியது.

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,720 உயர்ந்தது. மேலும் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், போர்ச்சூழல் மீண்டும் தொற்றிக் கொண்டதால், தங்கத்தின் விலை சரிந்து காணப்பட்டது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனையானது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம். சவரனுக்கு ரூ.1,600-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்துக்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.1,13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ரூ.14,125-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

09-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,000

08-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

07-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,880

06-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,920

05-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

09-04-2026- ஒரு கிராம் ரூ.260

08-04-2026- ஒரு கிராம் ரூ.265

07-04-2026- ஒரு கிராம் ரூ.255

06-04-2026- ஒரு கிராம் ரூ.260

05-04-2026- ஒரு கிராம் ரூ.255

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com