GOLD PRICE TODAY | சற்றே குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
GOLD PRICE TODAY | சற்றே குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்
Published on

தங்கம் விலை கடந்த 25-ந்தேதியில் இருந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த 28-ந்தேதி விலை குறைந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினமும் விலை அதிரடியாக சரிந்து கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் குறைந்தது.

இந்த சூழலில் நேற்று அப்படியே தங்கம் விலை அந்தர்பல்டி' அடித்தது. அதாவது, நேற்று முன்தினம் எந்த அளவுக்கு குறைந்ததோ? அதே அளவுக்கு நேற்று உயர்ந்தது. கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 100-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,12,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

30-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800

29-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200

28-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800

27-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,840

26-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

30-04-2026- ஒரு கிராம் ரூ.270

29-04-2026- ஒரு கிராம் ரூ.260

28-04-2026- ஒரு கிராம் ரூ.265

27-04-2026- ஒரு கிராம் ரூ.270

26-04-2026- ஒரு கிராம் ரூ.270

X

Maalai Malar
www.maalaimalar.com