

சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினமும், நேற்றும் தங்கம் விலை குறைந்து வந்தது.
நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் குறைந்தது. அதன்படி, ஒருகிராம் தங்கம் ரூ.13,300-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது.
காலையில் கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2,160-ம் குறைந்திருந்தது. மதியத்தில் எவ்வளவு வேகத்தில் குறைந்ததோ அதே வேகத்தில் அதிகரித்தது. மதியம் கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் உயர்ந்தது.
இதற்கிடையே, மாத தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைந்தது. அதன்படி, கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து கிராம் 13,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்ந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,06,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்த வரையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.